சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்போ.!! 3வது கணவரை பிரிந்த வனிதாவை விமர்சித்த பிரபல நடிகை..!!

கணவர் பீட்டர் பாலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து வனிதா வீடியோ வெளியிட்ட நிலையில் அவை அனைத்தும் பொய் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.நடிகை வனிதாவுக்கும் அவரின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்துள்ளனர். பீட்டர் பால், மது வுக்கு அடிமையானவர். அவரை நம்பி ஏமாந்து விட்டேன். பீட்டர் பாலை விட்டு நான் விலகிபோய் விடுகிறேன் மற்றும் நான் தோத்து போய் விட்டேன் என்று வனிதா அழுதபடி பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த ஒருவர் இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று நடிகை கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கஸ்தூரி வீடியோ வேறயா, பார்த்து விட்டு சொல்கிறேன். எனது அனுபவத்தில் அது எல்லாமே சொல்வதெல்லாம் பொய் ரகம்தான் என்று பதில் அளித்தார்.பின்னர் வீடியோவை பார்த்து விட்டு டுவிட்டரில் கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில் ஓ மை கடவுளே.

நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். எடிட்டிங் மற்றும் டைட்டில் கார்டுடன் உள்ளது.சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்போ புரியலைடா சாமி. முழுக்க பொய். தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க.வனிதா மட்டும் பாதிப்புக்கு உள்ளானவர். எல்லாமே எதிர்பார்த்தவைதான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் குற்றம் சொல்லணும்.

 

நம்ப முடியவில்லை.எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ மூலம் அதிக பணம் சம்பாதிக்கப்படும். அவர் பீட்டர் பாலுக்கான மருத்துவமனை செலவுகளை திரும்ப பெறுகிறார் என்று யூகிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Comments are closed.