பிக்பாஸில் அனிதாவின் எண்ட்ரியை பார்க்க தந்தை செய்த காரியம்… இரவில் பக்கத்து வீட்டு கதவை தட்டினாரா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருபவர் தான்.இந்நிலையில் இவர் பிக்பாஸில் கலந்து கொள்ளும் முதல் நாளினை காண்பதற்கு இவரது தந்தை பக்கத்து வீட்டு டீவியில் பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னுடைய சொந்த ஊர் திருவாரூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். ஆனால் இப்போது குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறோம் நான் மட்டும் அவ்வப்போது சென்னையிலிருந்து ஊருக்கு சென்று வருவேன்.இவ்வாறு இருக்கும் கிராமத்து வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. இந்நிலையில் லாக்டவுன் டைம் என்பதால் அங்கேயே தங்கிவிடும் நிலையும் ஏற்பட்டுவிட்டது.என் மகள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று ஆசையாகத்தான் இருந்தது.

என்னுடைய ஊர் கிராமம் என்பதால் அங்கே சீரியல்களை விரும்பிப் பார்ப்பார்கள் அதனால் என்ன செய்வது என்று யோசித்து தயங்கித் தயங்கி பின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் என் மகள் டிவியில் வராலாம் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளலாமா என்று கேட்டுவிட்டு போனேன்.ஆனால், நல்லவேளையாக அங்கே பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கப் போவதாக சொன்னார்கள், பின்னர் சரி என்று அங்கேயே உட்கார்ந்து என்னுடைய மகள் வரும் வரைக்கும் பார்த்தேன். என்னுடைய மகள் மேடையில் கமல் சாரிடம் என் பெயரை சொன்னபோது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்தது.

என் பக்கத்து வீட்டுக்காரரோ இருந்து முடியும் வரை பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஆனாலும் என் மகள் வந்த வரைக்கும் பார்த்து விட்டு கிளம்பி விட்டேன் என்று மிகவும் உணர்ச்சி பொங்க கூறியிருக்கிறார் அனிதா சம்பத் தந்தை.


Comments are closed.