கையில ஒரு ரூபாதான் இருக்கும்…. பசி வயித்தை கிள்ளும்… இயக்குநர் சமுத்திரக்கனியின் சோகமான பக்கங்கள்? நெகிழ்ச்சில் தமிழ் ரசிகர்கள்

நல்ல சினிமாக்கள், நல்ல மனிதர்களை உருவாக்கும்’ என்பார்கள். அப்படியான நல்ல சினிமாக்களை கொடுக்க ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் கடுமையாக உழைக்கும் இயக்குநரின் சமுத்திரக்கனி வாழ்க்கையில் கடந்து வந்த பாதை மிக நீளமானது.இயக்கம், நடிப்பு என அனைத்திலும் கலக்கி வரும் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் கலைஞரான சமுத்திரக்கனியின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல் தொடர்பில் அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பகிந்துள்ளார்.இயக்குநர் சமுத்திரக்கனி பகிர்ந்த சினிமா அனுபவங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

 

இதுகுறித்து பேசிய அவர், ”எனக்கு சின்ன வயசுல இருந்தே படம் பார்க்குறதுல பெரிய ஆர்வம் இல்ல.அப்படி இருந்த என்னை, என் நண்பன் 8-வது படிக்கும் போது படத்துக்கு கூட்டிட்டு போயிட்டான். எங்க ஊர்ல இருக்குற காளீஸ்வரி தியேட்டர் அப்போ ரொம்ப பேமஸ்.

அங்கதான் படங்கள் பார்ப்போம். நான் இப்படி தொடர்ந்து படத்துக்கு போறது பிடிக்காத எங்க அப்பா, என்னை உள்ள விட கூடாதுன்னு தியேட்டர் ஆளுங்க கிட்ட சொல்லிட்டாரு. அதனால, நான் உள்ள போகாம, வெளியில இருக்குற பாறைல படுத்துட்டு வசனத்தை மட்டும் கேட்டுட்டு இருப்பேன்.அதே தியேட்டர்ல, 10-வது முடிச்ச அப்புறம் நான் டிக்கட் கிழிக்க ஆரம்பிச்சேன். வீட்டுலயும், என் தீவிரத்தை பார்த்து எதுவும் சொல்லாம விட்டுட்டாங்க.

 

Comments are closed.