தளபதி 68ல் இருந்து விலகிய முன்னணி நடிகர்..!! பல ஆண்டுக்குப் பிறகு சேர இருந்த கூட்டணி.?

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த திரைப்படம் தான் லியோ. தற்போது இந்த திரைப்படம் வசூல் செய்தியாக நல்ல சாதனை படைத்து வருகின்றது. மேலும், இந்த திரைப்படம் பல எதிர்ப்புகளை மீறி திரையரங்கில் வெளிவந்து மக்கள் மத்தியில்

 

நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பையும்

 

இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் இதற்கான பூஜை கண் சில நாட்களுக்கு முன் போடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தெரிவித்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவரின் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் சந்தானம்

 

இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை தேர்வு செய்து விட்டோம் என்று அவர் தெரிவித்த தகவல் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது.

 

இந்த தகவலை கேட்ட பல ரசிகர்கள் இவர்களுடைய காம்போவை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

Comments are closed.