அந்த சீனியர் நடிகை அந்த தொழில் செய்பவரா…? நடிகர் சங்க வாட்ஸ்ஆப் குரூப்பில் துணை நடிகர் பஞ்சாயத்து..!
சாதாரணமாக தொழில் என்ற வார்த்தையை பிசினஸ் என்பதன் பொருளாக தான் பார்க்கிறார்கள். ஆனால் சினிமா வட்டாரத்தில் தொழில் என்றால் அது விபச்சார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதற்கு இந்த பிரச்சனை சான்றாகும். கொரானா தாக்கத்தினால் பல்வேறு சினிமா கலைஞர்களும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சினிமா நடிகர்கள் மட்டும் இல்லாமல் நாடக கலைஞர்களும் இதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது பாண்டவர் அணியான விஷால்,
கார்த்தி, நாசர் ஆகியோர் நாடகக் கலைஞர்களுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் ஒரு உறவு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வாட்ஸ் அப் குரூப் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இதில் நாளுக்கு நாள் கொரானாவுக்கு உதவி செய்த நடிகர்கள், தாங்கள் என்ன செய்தோம் என்பதை பகிர்ந்து கொண்டுள்ளனர். அப்போது திருவண்ணாமலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர் வாசுதேவன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பாரதிராஜாவின் முதல் மரியாதை பட நடிகை ரஞ்சனி நீங்கள் யார்? நடிகரா? என கேட்டுள்ளதாக தெரிகிறது.
அதற்கு வாசுதேவன் நடிகராக இல்லாமல் எப்படி இந்த குரூப்பில் இருக்க முடியும். சினிமா நடிகைகள் அனைவரும் வேறு தொழில் செய்பவர்கள் என பேசியதாக அவர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் செய்துள்ளார் ரஞ்சனி.
ஆனால் அவரோ சினிமா தொழிலில் வேறு, நாடக தொழில் வேறு என்பதை சுட்டிக் காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் இந்த பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கையில் ஏன் தயாரிப்பாளர் சங்க உரிமையாளர்கள் எதைப்பற்றி கேட்கவில்லை என மனம் நொந்து கிடப்பதாக ரஞ்சனி கவலையாக குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.