கொள்ளை அழகுடன் மேக்கப் இல்லாமல் மின்னும் நடிகை மீனா.! திருமணத்திற்கு பிறகும் எப்படி இருக்கிறார் தெரியுமா? அம்புட்டு அழகு…!
ஆறு வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிய பல ரசிகர்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா.அம்மா ஆறடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பது போல அம்மாவின் நடிப்பையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு வந்துவிட்டார் மீனாவின் மகள் நைனிகா.
ரஜினி அங்கிள் என சிறு வயது கதாபாத்திரமாக இருக்கட்டும், ரஜினி ஜோடியாக நடித்த கதாபாத்திரமாக இருக்கட்டும் எதிலுமே கச்சிதமாக பொருந்தக்கூடியவர் மீனா.அந்த காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி சரளமாக ஆறு மொழிகள் பேசக்கூடியவர் என்பதால் முன்னணி படங்களில் கதாநாயகிக்கு டப்பிங்கும் செய்துள்ளார்.உதாரணமாக சேரனின் ‘பொக்கிஷம்’ படத்தில் கதாநாயகி பத்மபிரியாவிற்கு நடிகை மீனா தான் குரல் கொடுத்திருப்பார்.நடிகை மீனா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் .
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது.இந்நிலையில் தற்போதைய மீனாவின் புகைப்படத்தினையும், பழைய புகைப்படத்தினையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதேவேளை, மீனா மேக்கப் போடாத புகைப்படத்தினையும் ரசிகர்கள் தேடி கண்டுப்பிடித்துள்ளனர்.அவரின் அழகும், ஸ்டைலும் முன்பை விட அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். குறித்த புகைப்படத்தினை நீங்களே பாருங்கள்.
Comments are closed.