பசியால் தவித்த மயில்…. தெருவில் வேலை செய்து பிழைக்கும் பெண்ணின் நெகிழ்ச்சியில் செயல்! மில்லியன் பேர் பார்த்த காட்சி

தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் நீல மயில், மற்றும் பச்சை மயில் Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும். மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் ‘கண்’ வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன.

பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.

இப்படிபட்ட சிறப்பு அம்சங்களை கொண்ட மயில் ஒன்று பசியால் தவித்து அதற்கு உணவு அளிக்கும் பெண் ஒருவரின் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. குறித்த பெண் சாலையோரம் காய்கறிகள் விற்று வருகின்றார். வ று மை வாட்டியபோதும், மயிலுக்கு தன்னால் இயன்ற உதவி செய்யும் பெண்ணை சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.