சூப்பர் சிங்கர் செந்திலா இது?… கல்லூரியில் சக பெண் தோழிகளுக்கு நடுவே ஸ்டைலாக இருக்கும் புகைப்படம்…!!

சூப்பர் சிங்கர் செந்திலா இது?… கல்லூரியில் சக பெண் தோழிகளுக்கு நடுவே ஸ்டைலாக இருக்கும் புகைப்படம்…!! செந்தில்கணேசன் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமிய மக்களிசைப் பாடகர் ஆவார். 15 சூலை 2018 அன்று விஜய் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் – 6வது போட்டியில் செந்தில்கணேசன் முதல் இடத்தை வென்று, ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக வென்றார். இவரது மனைவியும், கிராமிய மக்களிசைப் பாடகருமான இராஜலெட்சுமி இப்போட்டியில் கலந்து கொண்டு ஆறுதல் பரிசு வென்றார். பிரபல ரவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.

நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே. சமீபத்தில் கொரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடி அசத்தினர். பின்பு தனது சிறுவயது ஆசையை யானையின் மீது சவாரி செய்து நிறைவேற்றிக்கொண்ட செந்திலின் காணொளி தீயாய் பரவியது. தற்போது சூப்பர் சிங்கர் செந்தில் தான் கல்லூரி படிக்கும் போது, வகுப்பறையில் சக மாணவிகளுடன் இருக்கும் புகைப்படத்தினை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Ithu nama throw back 😎😍

Posted by Senthil Ganesh on Friday, April 17, 2020

Comments are closed.