கோ பப்பட்ட முதலாளி…மனதால் கா யம்பட்ட பூனை… வீட்டைவிட்டு வெளியேறிவிட்டு என்ன கொண்டு வந்தது தெரியுமா?

வீட்டில் இருந்த இயர்போனை கடித்த பூனையை, அதை வளர்க்கும் உரிமையாளர் கோ பத்துடன் திட்ட, பதிலுக்கு மன்னிப்பு கேட்கும் தொனியில் பூனை செய்த செயல் இப்போது இந்தோனேஷியாவில் செம வைரலாகி வருகிறது. இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தவர் ஹர்யந்தோ பேர்விர்ரா ரமாதானி. இவர் தன்வீட்டில் ஆசை, ஆசையாய் பூனை ஒன்று வளர்த்து வருகிறார். எப்போதும் அவர் தூங்கும் போது, அவர் பக்கத்தில் வந்து அந்த பூனையும் படுத்துக்கொள்ளும். அன்று காலையில் அப்படிப்படுத்த பூனை தலைமாட்டில் இருந்த அவரது இயர்போனை வைத்து விளையாடி இருக்கிறது.

பூனை க டித்து விளையாடியதில் இயர்போன் இரு துண்டுகளாகி விட்டது. அதைப் பார்த்துவிட்டு பூனையை வளர்த்தவர் அதை கோ பமாகத் திட்டினார். உடனே பூனை வெளியே போய் விட்டது. ஒரு மணி நேரத்துக்கு பின்னர் வீட்டுக்குள் வந்த பூனை இயர்போனை கடித்ததற்கு வருத்தம் தெரிவிக்கும் முகபாவனையிலேயே இருந்தது. கூடவே தன் வாயில் இயர்போனை போன்று ஒரு குட்டி பாம்பையும் பிடித்துவந்து ஹர்யந்தோவின் முன்னாள் போட்டது.

இதை அவர் பூனை பதிலுக்கு கொடுத்த வெகுமதி எனப் போட, அவர் முகநூல் பக்கத்திலேயே 7000க்கும் அதிகமானோர் இதை ஷேர் செய்துள்ளனர். குறும்புக்கார பூனை தான் போல!

Comments are closed.