மனிதர்களையும் மிஞ்சிய காகத்தின் செயல்! மில்லியன் பேரை வியக்க வைத்த காட்சி

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுத்தமாக இருப்பதே அதில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்ற கருத்து முன் வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த கூற்று மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் என்பதை காகம் ஒன்று நிறுபித்துள்ளது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், காகம் ஒன்று தண்ணீர் அருந்தி விட்டு வீசி சென்ற வெற்று போத்தலை எடுத்து குப்பை தொட்டிக்குள் போட்டு செல்லுகின்றது. இந்த செயல் மனிதர்களையும் மிஞ்சி விட்டது.

பலர் என்ன தான் சுத்தம் பற்றி பேசினாலும் அதை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பது கிடையாது. இந்நிலையில் காகத்தின் இந்த செயலை பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Comments are closed.