அனைவரும் ரசிக்கும்வகையில், சீயான் விக்ரமிற்கு வடிவேலு கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ் என்ன தெரியுமா..? வியப்பில் ஆழ்ந்த விக்ரம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சீயான் விக்ரம். தனது உடலை வருத்தி படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தோற்றத்தை கொண்டுவருவதில் இவருக்கு இணை இவரே என்று கூறலாம். காசி, சேது, பிதாமகன், ஐ என பல படங்களிலும் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார்.

நடிகர் விக்ரம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக் கூறினர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பெருமளவில் ரசித்த வீடியோ ஒன்று வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். அதாவது வடிவேலு, நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்த கிங் படத்தின் ஒரு காமெடி காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம், வாழ்க பல்லாண்டு என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.