இப்போ பார்த்தாலும் அ ழுகைதான் வருது..! உ ருக்கமான பதிவுடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்டுள்ள வீ டியோவை பார்த்தீர்களா..!

இப்போ பார்த்தாலும் அழுகைதான் வருது..! உருக்கமான பதிவுடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தீர்களா..! பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பேசிவந்த அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அவர் தற்பொழுது ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் காமெடி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தனது கணவருடன் ரியாலிட்டி ஷோகளிலும் கலந்துவந்தார். மேலும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமின்றி அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் நிஷாவிற்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் நடிகை நிஷா தனது திருமண வீடியோவை பார்த்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், வேற வழி என்னுடைய திருமண வீடீயோவை பார்த்தேன். இப்போ பார்த்தாலும் அழுகைதான் வருது. பொண்ணா பொறந்தா இதையெல்லாம் கடந்துதான் போகணும் என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.