பார்ப்பவர்கள் க ண் க ல ங்க வைத்த பாசக்கார மாடு செய்த வேலை பார்ப்பவர்களை அவசர வைக்கும் செயல் நீங்களே பாருங்க

மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வைக்கும் விவசாயிகள் பலரையும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என பல்லேலக்கா பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடும் பாடலைப் போலவே நிஜத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது என்றால் ஆச்சர்யம் தானே? அந்த குடும்பம் தனது வீட்டு பெட்டூம் வரை தன் வீட்டு மாடை அனுமதிக்கிறது.
ஆம்பூர் பக்கத்தில் உள்ள வீராங்குப்பத்தை சேர்ந்தவர் அறிவொளி ஆனந்தன். விவசாயியான இவர் வீட்டில் பசு மாடுகளும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் பசு ஒன்று கன்று ஈனியது. அது ரொம்பவே துரு, துருவெனவும் அனைவரிடமும் அன்பாகவும் பழக அதற்கு ‘வேலவன்’ என பெயரிட்டு மகிழ்ந்தனர். ஒருகட்டத்தில் துள்ளிக்குதித்து வீட்டு புழக்கடையில் இருந்து வீட்டுக்குளேயே வந்து விட்டது. அதிலும் ஒரு அறை விடாமல் எல்லா அறைக்கும் போய் வரத் தொடங்கியது.

வைக்கோல், புண்ணாக்கு சாப்பிடும் மாடுகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் வேலவனோ முதலில் வீட்டுக்குள் நுழைந்தது. இப்போது பெட்ரூம் வரை வந்து விட்டது. மேலும் குழந்தைகள் வீட்டில் சாப்பிடும் மிக்சர், காரச்சோவு எல்லாம் வேலவனுக்கும் பேவரட் உணவு ஆகிவிட்டது. இதையெல்லாம் விட ஒருபடி மேலேபோய், மனிதர்களுடனே பாய், தலைகாணி விரித்து கொடுத்தால் தான் படுக்கிறான் வேலவன்.

அவ்வப்போது தொழுவத்தில் தலைகாட்டும் வேலவன், தாய்ப்பாலை குடித்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் வந்து விடுகிறது. மாடு இப்படி இருப்பது ஆச்சர்யப்படுவதா? அல்லது அந்த அளவுக்கு மனிதநேயத்தோடு இருக்கும் இந்த குடும்பத்தை பார்த்து ஆச்சர்யப்படுவதா? என நமக்கே குழப்பம் வருகிறது. இந்த குடும்பத்தைப் போல் பலரும் இருந்து விட்டால் மனிதம் பரவும்

Comments are closed.