கோழி இறைச்சியில் கொ ரோ னா வை ரஸ் !! அதிர்ந்து போன அதிகாரிகள் !! மக்களே உஷார் !!

சீனாவில் இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியை சோதனை செய்ததில் கொரோனா வைரஸ் உறுதியானததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியிலே கொ ரோ னா உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் அ சுத்தமான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக தொடர்ச்சியான அறிக்கைகள் வெளியானதை அடுத்து அதிகாரிகள் இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர். பிரேசிலில் இருந்து சீனாவின் ஷென்சென் லாங்காங் மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் கொ ரோ னா வை ரஸ் கண்டறியப்பட்டது என்று நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிகாரிகள் கோழி இறைச்சி நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.
கோழி இறைச்சியுடன் தொடர்பிலிருந்த நபர்களை ஷென்சென் சுகாதார அதிகாரிகள் உடனடியாக கண்டுபிடித்து சோதனை செய்தனர், அனைவருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

அந்நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்தையும் சோதனை செய்ததில் கொரோனா இல்லை என கண்டறியப்பட்டது.

ஏற்கனவே விற்கப்பட்ட அதே நிறுவனத்தின் பொருட்களை அதிகாரிகள் இப்போது கண்டுபிடித்து வருகிறார்கள், மேலும் கோழி இறைச்சிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்துள்ளனர் என ஷென்சென் லாங்காங் நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Comments are closed.