புகழ்பெற்ற மூத்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்.? இரங்கல் தெரிவித்து வரும் முன்னணி பிரபலங்கள்.?

சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பல திரைப்படத்தில் நடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் ஆர் எஸ் சிவாஜி என்பவர். இவருக்கு தற்பொழுது 67 வயது ஆகின்றது. இவர் கமலுடன் ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த

 

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் பேசிய சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்ற வசனம் மக்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. அதனை தாண்டி வில்லன், ஆயுத எழுத்து, கோலமாவு கோகிலா

 

சூரரைபோற்று உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த கார்கி திரைப்படத்திலும் அவரது அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

 

இதனைத் தொடர்ந்து நேற்று நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த லக்கி மேன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

ஒரு நிகழ்ச்சியில் இவரும் கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இன்று இவர் சென்னையில் உடல் நலக் குறைவின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். மேலும், இவருடைய மரணத்திற்கு பல முன்னணி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் மற்றும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.