முந்தானை முடிச்சு படத்தில் நடித்த பாட்டு டீச்சரா இது !! என்ன இப்படி ஆகிட்டாங்களே வைரலாகும் புகைப்படம் !!
தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் பலர் அடையாளம் தெரியாமல் காணாமல் போயுள்ளனர்.ஆனால் சிலர் இன்றளவும் மக்களின் மனதில் நிற்கின்றனர்.அந்தவகையில் மக்கள் மனதில் இன்றும் இருப்பவர்தான் முந்தானை முடிச்சு படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த உன்னி மேரி.1983ஆம் ஆண்டு வெளியாகிய முந்தானை முடிச்சு திரைப்படத்தை பாக்கியராஜ் எழுதி இயக்கி நடித்திருந்தார்,அந்த சமயத்தில் மெகா ஹிட்டான இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ் ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார். பட்டு டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் கிளாமராக நடித்து அசத்தியவர் நடிகை உன்னி மேரி. 57 வயதான இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்து வளர்ந்தவர், இவர் 1969 ஆம் ஆண்டு மலையாத்தில் வெளியான நவ கூடு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதுமட்டுமில்லாமல்.
தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் கிளாமராகவும் நடித்து அசத்தியுள்ளார். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் முதியோர் கல்வி கற்றுக்கொடுக்கும் டீச்சராக கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்,
நடிகை உன்னி மேரி ரிஜாய் என்பவரை கடந்த 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு நிர்மல் என்றும் மகன் இருக்கிறார், 1992 ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு இல்லத்தரசியாக வாழ்ந்து வருகிறார் அவ்வபோது சமூகவலைதளத்தில் புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்.
Comments are closed.