நான் ஹீரோவா இருந்தாலும் இவர் நடிப்புனால் தான் படம் ஓடுச்சு..??இவரால் தான் 5 படம் ஹிட்ஆச்சு..!! இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுமா..??

உலகநாயகன்   கமலஹாசனுக்கும்,   நடிகர்  நாசருக்கும்   சினிமா   என்பதையும்   தாண்டி   ஒரு இணக்கமான   நட்பு   உண்டு.    கமலஹாசனின்   பெரும்  பாலான   படங்களில்    கண்டிப்பாக நடிகர்   நாசர்    இருப்பார்.   இதில்   ஒரு   சில   படங்களில்   நடிகர்  கமலஹாசனையே   மறந்து நாசரை   பார்க்கும்   அளவுக்கு   நடிப்பில்  நடிப்பில்   பட்டையை   கிளப்பி   இருப்பார்.   பிசி ஸ்ரீராம் இயக்கத்தில்   கமலஹாசன்,   கௌதமி,   அர்ஜுன்   ஆகியோர்   நடித்த

குருதிப்புனல். இந்த   படத்தில்   நாசர்   பத்ரி   என்னும்   கதாபாத்திரத்தில்   நடித்திருப்பார்.    கமலஹாசன் காவல்துறை   அதிகாரியாகவும்,   நாசர்   தீவிரவாத   குழுவின்   தலைவனாகவும்   இந்த   படத்தில் நடித்திருப்பார்கள்.   குருதிப்புனல்   பத்ரியின்   வில்லத்தனம்   ஹீரோ   கமலையே   மறக்க   செய்திருக்கும்.

பரதன்   இயக்கத்தில்   கமலஹாசன்   எழுதி,   தயாரித்து,   நடித்த   திரைப்படம்    தான்   தேவர் மகன்.   தமிழ்   சினிமா   ரசிகர்களின்   நினைவில்   இருக்கும்   வரை   நாசர்   ஏற்று நடித்த  மாயாண்டி  தேவர்   கதாபாத்திரமும்   நினைவில்   நிற்கும்.   கமலஹாசன்   இவரையும் தாண்டி  நாசரின்   நடிப்பு   பார்ப்பவர்கள்   கவனிக்கத்தக்கதாக  இருந்தது.

இயக்குனர்   கே எஸ் ரவிக்குமார்  கூட்டணியில்   வெளியான    அவ்வை சண்முகி .   கமலஹாசன், ஜெமினி   கணேசன்,  மீனா   ஆகியோர்   நடிப்பில்   இந்த   படம்   ரிலீஸ்   ஆனது.   இதில்   பாட்ஷா பாயாக   நடித்த   நாசர்   நகைச்சுவையில்   பட்டையை   கிளப்பி   இருப்பார்.   அதிலும்   அவர் பேசும்   சென்னை   வட்டார   பேச்சு  நல்ல   வரவேற்பு   பெற்றது.

இயக்குனர்   சுந்தர் சி   இயக்கத்தில்   கமலஹாசன்,   ஆர் மாதவன்  , கிரண்   ஆகியோர்   நடித்து  ரிலீஸ்  ஆன   திரைப்படம்  தான்   அன்பே  சிவம்.   இந்த   படத்தில்   நாசர்   கதாநாயகியின் தந்தை  யாக கந்தசாமி  படையாட்சி   என்னும்   கதாபாத்திரத்தில்   நடித்திருப்பார்.   இந்த படத்தில்   நாசர்   தன்னுடைய   வில்லத்தனமான   நடிப்பில்   மிரட்டி   இருப்பார்.

இயக்குனர் ரமேஷ்  அரவிந்த்   இயக்கத்தில்   , வெளியான   திரைப்படம்   உத்தம வில்லன்.  இந்த படத்தில்   நாசர்,   ஊர்வசி,   கமலஹாசன்,   எம் எஸ் பாஸ்கர்   ஆண்ட்ரியா   ஆகியோருக்குள் ஒரு பெரிய   நடிப்பு   போட்டியையே   பார்க்கலாம்.   ஒவ்வொரு   காட்சிகளிலும்   ஒருவருக்கொருவர் சளைக்காமல்   தங்கள்  நடிப்பு  திறமையை  காட்டி  இருப்பார்கள்.

Comments are closed.