கிளி ஜோசியம் பார்த்து படத்தை ரிலீஸ் செய்யும் R J பாலாஜி..?? ஒரே நாள்ல தியேட்டர் விட்டு ஓடாம இருந்தா சரி..?? இந்த படமா..!! கொஞ்சம் சந்தேகம் தான்..!!
ஆர் ஜே பாலாஜி ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்த இவர் கிராஸ் டாக் என்னும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவருடைய நகைச்சுவையான பேச்சு இவரை மக்களிடையே கொண்டு சேர்த்தது. அதன் பின்னர் இவர் கிரிக்கெட் கமெண்ட்ரியும் செய்து வந்தார். வழக்கமான கிரிக்கெட் கமெண்ட்ரியிலிருந்து இவருடைய தொகுப்பு ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.
இப்படி சென்று கொண்டிருந்த ஆர் ஜே பாலாஜியின் வாழ்க்கையை சினிமாவுக்குள் கொண்டு வந்தது இயக்குனர் சுந்தர் சி தான். இவர் நடித்த முதல் படத்தை பார்க்கும் பொழுது தெரியும் இவருக்கு அப்போது நடிப்பு என்பது சுத்தமாக வராது என்று. தீயா வேலை செய்யனும் குமாரு, வாயை மூடி பேசவும்
போன்ற ஒரு சில படங்களில் இவர் காமெடியனாக நடித்திருந்தார். இப்படி பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு எல்கேஜி என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இன்றைய அரசியலை பங்கமாய் கலாய்த்து வெளிவந்த திரைப்படம் தான் இது.
இந்த ப டத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின்னர் ஆர் ஜே பாலாஜி யாரும் எதிர்பார்க்காத விதமாக இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தனி கதாநாயகியாக வைத்து இவர் இயக்கிய படம் தான் மூக்குத்தி அம்மன். இதுவரை வந்த சாமி படங்களில் முற்றிலும் வித்தியாசமாக
வந்த கதை களம் இது. இந்த படத்தின் மூலம் ஒரு இணை இயக்குனராகவும் இவர் வெற்றி கண்டார். அதன் பின்னர் பாலிவுட் படமான பதாய் ஹோ என்னும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி வீட்ல விசேஷங்க ப டத்தை இயக்கினார் .வித்தியாசமான கதை களங்களிலும் , நடிப்பிலும் ரசிகர்களை கவரும் ஆர் ஜே பாலாஜி
தன்னுடைய படங்களின் ப்ரமோஷனிலும் ரொம்பவும் வித்தியாசத்தை கையாள கூடியவர். இவர் பிரமோஷன் செய்யும் விதத்திலேயே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். இந்நிலையில் ஆர் ஜே பாலாஜிக்கு அடுத்து ரிலீசாக இருக்கும் படம் தான் ரன் பேபி ரன். இந்த படத்தின் பிரமோஷனை சமீபத்தில்
இவர் கிளி ஜோசியம் மூலம் செய்திருக்கிறார். கிளி ஜோசியக்காரரிடம் படம் எப்படி ரீச் ஆகும் என்பது முதற்கொண்டு கேட்டிருக்கிறார். ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தாலே ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று விடும். இப்படி பிரமோஷன் எல்லாம் செய்து ரன் பேபி ரன் ஒரே நாளில் தியேட்டரில் இருந்து ரன் ஆகாமல் இருந்தால் சரி.
Comments are closed.