வளைத்து வளைத்து ஆர்.ஜே. பாலாஜியிடம் அந்த மாதிரியான பல கேள்விகளை கேட்ட செய்தியாளர்..??கொந்தளித்தபாலாஜி பேசிய வார்த்தை..??புதுசு புதுசா பிரச்சினையை கிளப்புறாங்க..??

நடிகர்  ஆர்.ஜே பாலாஜி,   ஐஸ்வர்யா   ராஜேஷ்   நடித்துள்ள   ரன்   பேபி ரன்  படத்தின்   ட்ரைலர் அண்மையில்  வெளியாகி  இணையத்தில்   ட்ரெண்டாகியுள்ளது.  ஆர்.ஜே   பாலாஜி முதன்  முறையாக   சீரியஸ்   கதாபாத்திரத்தில்   நடித்துள்ளார்.  இவருடன்  ஐஸ்வர்யா   ராஜேஷ் இணைந்து   முதன்   முறையாக   நடித்துள்ள   நிலையில்,   படத்தின்   ட்ரைலர்   விறுவிறுப்புடன் ஒரு   கொலையை   மையமாக  வைத்து  நகர்ந்துள்ளது. இந்நிலையில்   இப்படத்தின்

பத்திரிக்கையாளர்கள்   சந்திப்பு   அண்மையில்   சென்னையில்   நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்   படத்தின்   இயக்குனர்   ஜியன்  கிருஷ்ணகுமார்,  ஐஸ்வர்யா  ராஜேஷ்,   ஆர்.ஜே பாலாஜி   உள்ளிட்டோர்   கலந்துக்கொண்டனர்.  அப்போது  மேடையேறி   பேசிய ஆர்.ஜே பாலாஜியிடம்  பத்திரிக்கையாளர்

 

ஒருவர்   கேட்ட   கேள்விக்கு   வேறு  வேறு பதிலை  சம்மந்தமே தெரிவித்து   அந்த  இடத்தில்   உள்ளோருக்கு   சிரிப்பலையை   ஏற்படுத்தியுள்ளார்.அப்போது  பேசிய  ஆர்.ஜே.பாலாஜி  தான்  இந்த   அப்படத்தில்   தன்னுடைய  சிறப்பான  நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும்,   எப்போதும்   காலத்துக்கு   ஏற்றார்   போல்   அப்டேட்டாக   இருக்க வேண்டியது

அவசியம்  என்றும்   பேசினார்.   மேலும்  15  வயதிலிருந்து   25   வயது  வரை உள்ள  இளைஞர்கள்  சினிமாவின்  மீதுள்ள  ஆர்வத்தால் அவர்களுக்கு   தேவையே   இல்லாத   விஷயத்தில்   அவர்களது   எண்ணங்கள்   போவதை பார்க்கும்  போது   தனக்கு   வருத்தம்  அளிப்பதாக   தெரிவித்தார்.  இதனிடையே பத்திரிக்கை யாளர்கள்

 

வளைத்து   வளைத்து   ஆர்.ஜே.  பாலாஜியிடம்   தங்களது   பல கேள்விகளை   தொடர்ந்து   கேட்க   ஆரம்பித்தனர்.  அதில்   ஒரு   பத்திரிக்கையாளர்,கடந்தாண்டு   டிசம்பரில்   புதுக்கோட்டை   மாவட்டத்தில்  உள்ள  ஆதி  திராவிட   மக்கள்   வசித்து வரும்  வேங்கை   வயல்   பகுதியில்  அமைந்துள்ள  குடிநீர்   டேங்கில்  மனித   கழிவுகளை சில

அந்நியர்கள்  வீசி   சென்றுள்ளனர்.  இதை ஒட்டுமொத்த   இந்தியாவே   அதிர்ந்த   நிலையில், தமிழக   முதலமைச்சர்   உள்ளிட்ட  பல  கட்சியினர்   தங்களது  ஆதங்கத்தை   தெரிவித்தனர். இதனிடையே   இதுகுறித்து  ஆர் ஜே  பாலாஜியிடம்  கேள்விக்  கேட்கப்பட்டது.  அதற்கு  பதிலளித்த அவர்,  தனக்கு  தனுஷ்  நடித்த திருச்சிற்றம்பலம்  மிகவும்   பிடித்தது   என்றும்  நேற்றைய

கிரிக்கெட்  போட்டியில்  இரண்டு  வீரர்கள்   200 ரன்களை  எடுத்தது  பற்றியும்   சம்மந்தமே இல்லாமல்   பதில்   கூறினார்.  அவரது  இந்த  எதிர்ப்பாராத  பதிலுக்கு  அரங்கமே  சிரித்த நிலையில்,என்  மாற்றி  மாற்றி  பதில்  கூறுகிறீர்கள்  என பத்திரிக்கையாளர்கள்   வினவினர் .  உடனே கொந்தளித்த   ஆர்.ஜே.பாலாஜி,   நீங்கள்   கேட்ட   கேள்விக்கு  பதில்   என்னிடம்   உள்ளது,

ஆனால் அதை   வெளிப்படுத்தும்  மேடை  இது   இல்லை.   நான்  நடித்த   படத்தை   பற்றி  மட்டும்,  இந்த இடத்தில்  நீங்கள்  கேள்வி  கேட்டால்   நான்   கட்டாயம்   பதில்  கூறுவதாக   தெரிவித்தார்.  மேலும் தான் சும்மா ஜாலியாக விளையாடினேன்,  தவறாக  நினைத்துக்  கொள்ளாதீர்கள்  என பத்திரிக்கை  யாளரிடம்  தெரிவித்தார்.

Comments are closed.