அப்போ வடிவேலுவை அறிமுக படுத்தியது ராஜ்கிரண் இல்லையா ? T. ராஜேந்தர் படத்தில் தோன்றியுள்ள வடிவேலு ! புகைப்படம் இதோ !
அப்போ வடிவேலுவை அறிமுக படுத்தியது ராஜ்கிரண் இல்லையா ? T. ராஜேந்தர் படத்தில் தோன்றியுள்ள வடிவேலு ! புகைப்படம் இதோ ! தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும்.
நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’, ‘வைபரேஷன் வடிவேலு’, ‘செட்டப் செல்லப்பா’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘கந்துவட்டி கருப்பு’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’, ‘ஸ்டையில் பாண்டி’ போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர். தமது நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன்.
ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
இப்போல்லாம் யோகிபாபு, சூரி, சதிஷ் காமெடிக்கு கஷ்டப்பட்டு சிரிக்கும் நாம், ஒரு காலத்தில் டிவியில் கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு காமெடிக்கு விழுந்து அடிச்சு சிரிச்சது ஞாபகம் வருகிறது. அதோடு சில கண்ணீர் துளிகளும்…செல்போன் – இல் மூழ்கி இருக்கும் நமக்கு அவ்வப்போது இப்பவும் சிரிக்கிறோம் என்றால் அது வடிவேலு அவர்களை வைத்து வரும் MEMES தான் காரணம். இன்று வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறாரே அது என்ன சாதாரண விஷயமா ? நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் பெரிய அளவிற்கு சோபிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது வடிவேலு அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இவர் m முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தில் தான் நடித்திருக்கிறார். இதற்குப் பிறகு 3 வருடங்கள் கழித்துதான், நடிகர் வடிவேலு அவர்கள் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்திருந்தார்.
Comments are closed.