பிக்பாஸ் காயத்திரி போலவே இருக்கும் அக்கா யார் தெரியுமா!! அட. அவங்க படங்களில வேற நடிச்சு இருக்காங்களா!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் பல பேரின் கோபத்திற்கு ஆளானவர்தான் காயத்ரி ரகுராம் பிக்பாஸில் பங்கு பற்றிய போட்டியாளர்களில் கோபப்படுவதை மட்டுமே தன் அடையாளமாக கொண்டவர்தான் காயத்ரி ரகுராம் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் பிறந்தார் காயத்ரி ரகுராம் சினிமா பின்னணி உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவர் இவரது தந்தை பிரபல நடன இயக்குனர் ரகுராம் மற்றும் இவரது தாய் கிரிஜாவும் ஒரு நடன இயக்குனர். இவருடைய பெற்றோர்களின் திருமணம் ஒரு காதல் திருமணம் ரகுராம் திரைப் படங்களுக்கு நடன இயக்குனராக இருந்தபோது அவரிடம் அசிஸ்டென்டாக சேர்ந்தவர்தான் கிரிஜா அதன் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது.

காயத்ரிக்கு ஒரு அக்கா உள்ளார் அவர் பெயர் சுஜா அவரும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் காயத்ரியுடைய கொள்ளுத்தாத்தா கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் இவர் ஒரு இயக்குனர். தற்பொழுது சினிமா துறையில் முன்னணியில் இருக்கக்கூடிய நடன இயக்குனரான கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் இவர்கள் இருவருமே காயத்திரி உடைய சித்திகள் .

அதாவது காயத்ரியின் அம்மா கிரிஜா உடைய தங்கைகள் அதோடு இவரது பெரியம்மா ஜெயந்தியும் ஒரு நடன இயக்குனர் அவர்களது மகள்தான் கீர்த்தி இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் அங்கராக பணியாற்றினார். அதோடு விஜய் டிவியிலும் சில நிகழ்ச்சிகளில் அங்கராக வந்துள்ளார். இவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ் அவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காயத்ரி தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய ஆசை இல்லை என்றாலும் வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் இந்த திரைப்படத்தில் அவர் நடித்ததாக கூறப்படுகிறது

அதே 2002 ஆம் ஆண்டு கன்னடா மற்றும் மலையாளத்திலும் இவரது முதல் படம் வெளியானது 2003 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படத்தில் இவர் நடித்தார் அதன்பிறகு சில படங்களில் நடித்துள்ள இவர் 2006 ஆம் ஆண்டு தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் இவர் தன் கணவருடன் செட்டில் ஆனார்

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை கைவிட்டார் அதன் பிறகு தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்
பின்னர் 2008 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா வந்தார் 2008ல் வெளியான ஜெயம் கொண்டான் படம் மூலம் இவர் நடன இயக்குனர் தொழிலை தொடங்கினார் 2009 இல் இவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார் இதுவரை இவர் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக இருந்துள்ளார் என்று குறிப்பிட தக்கது

 

Comments are closed.