தேங்காய் துருவி விட்டு மூடியை தூக்கி எறிபவரா நீங்கள்? இனி செய்யாதீங்க…நரைமுடிக்கு தடைபோடும் கொட்டாச்சி…!
தேங்காய் பயன்படுத்தாத வீடுகளே இன்று இல்லை. மனைவிக்கு சமையலுக்கு உதவி செய்ய விரும்பும் கணவர்கள் கூட தேங்காய் துருவிக் கொடுப்பதைப் பார்த்திருப்போம். அப்படி தேங்காயை துருவி விட்டு நாம் வீசி எறியும் மூடியில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது.முன்பெல்லாம் நாப்பது வயதில் தான் எட்டிப்பார்க்கும் நரைமுடி இப்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகளுக்கே இருக்கிறது. ஆண்களைக் கூட விட்டுவிடுங்கள். இளவயது பெண்களுக்கு நரைமுடி தரும் தொல்லைகள் தாங்கவே முடியாதவை. நரைமுடியை கறுப்பாக இன்று மார்க்கெட்டில் பலவித டைகள் கிடைத்தாலும் அதன் ரசாயன வீச்சு உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
நரைமுடி பிரச்னைக்கு நாம் பாரம்பர்யத்தில் இருந்து வெகுதூரம் நகர்ந்து வந்துவிட்டது தான் காரணம். முன்பெல்லாம் வீட்டில் குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய், அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து தினமும் குளிக்கவைப்பது வழக்கம். அவை நரைக்கு தடை போடுவதிலும் முக்கியப்பங்கு வகித்தது. ஆனால் இன்று ஸ்டைல் என்னும் பெயரில் குழந்தைகள் தலையில் எண்ணெய் தேய்ப்பதே இல்லை. அதனால் பெருகும் நரைமுடி பிரச்னைக்கு இந்த தேங்காய் மூடி வேட்டு வைக்கிறது.
தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்க வேண்டும். இதை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலக்க வேண்டும். இதை சில நாள்கள் வெயிலில் வைக்க வேண்டும். அதன் பின்னர் எடுத்து தலைமுடிகளில் தடவலாம். இது எவ்வளவு நேரம் தலையில் இருந்தாலும் கெடுதல் இல்லை. கொஞ்ச நாள்கள் இப்படிச் செய்துவர நரைமுடிகள் மறையும். உங்கள் இளமையும் திரும்பும அப்புறமென்ன பேட்ட படத்தில் வரும் ரஜினி போல் இளமை திரும்புதேன்னு உற்சாகமாகிடுவீங்க…
Comments are closed.