பிக்பாஸில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா.? லட்சக்கணக்கில் சம்பாதித்தது யார் தெரியுமா.?ஷா க்கான ரசிகர்கள்..!! தீ யாய் ப ரவும் பட்டியல் இதோ..!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் உண்மையான சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வின்னரான ஆரிக்கு பிக்பாஸ் ட்ராஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? அவர்கள் இருந்த நாள் வரைக்கும் பெற்ற சம்பளம் எவ்வளவு என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, ரேகாவுக்கு ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு லட்சம் ரூபாய் என்றும் அவர் 14 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு 14 லட்சம் ரூபாய் மொத்த சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் சனம் ஷெட்டிக்கும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றும் அவர் 63 நாட்கள் இருந்ததால் 63 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆரிக்கு ஒரு நாளைக்கு 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் அவர் 105 நாட்கள் இருந்ததால் அவருக்கு 89 லட்சத்து 25000 ரூபாய் சம்பளம் என்றும் வெற்றியாளரான அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கம் என மொத்தம் 1 கோடியே 35 லட்சம் 25 ஆயிரம் ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுச்சிக்கு ஒரு நாளைக்கு 80,000 ரூபாய் என்றும் அவர் 49 நாட்கள் இருந்ததால் அவருடைய சம்பளம் 39.20 லட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது. அடுத்து அர்ச்சனாவுக்கு ஒரு நாளைக்கு 75,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 77 நாட்கள் இருந்ததால் மொத்தம் 57.75 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் த கவல் வெளி யாகி யுள்ளது. இதேபோல் ரம்யா பாண்டியனுக்கும் ஒரு நாளைக்கு 75,000 சம்பளம் என்றும் 105 நாட்கள் இருந்ததால் அவருக்கு 78.75 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தெரிய வந்துள்ளது.

அடுத்து கேப்ரில்லாவுக்கு ஒரு நாளைக்கு 70,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 102 நாட்கள் இருந்தது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை என மொத்தம் 76.40 லட்சம் வருமானம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து ஷிவானிக்கு ஒரு நாளைக்கு 60,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 98 நாட்கள் இருந்ததால் அவருக்கு 58.80 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் ஜித்தன் ரமேஷுக்கு ஒரு நாளைக்கு 60,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 69 நாட்கள் இருந்ததால் மொத்தம் 41.40 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வேல் முருகனுக்கு ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் சம்பளம் என்றும் 28 நாட்கள் இருந்ததால் அவருக்கு 14 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் நிஷாவுக்கு ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் 70 நாட்கள் இருந்ததால் 28 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சம்யுக்தாவுக்கும் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 56 நாட்கள் இருந்ததால் அவருக்கு 22.40 லட்சம் ரூபாய் வருமானம் என்றும் கூறப்படுகிறது.

அனிதா சம்பத்துக்கு ஒரு நாளைக்கு சம்பளம் 40,000 ரூபாய் என்றும் அவர் 84 நாட்கள் இருந்தால் 33.60 லட்சம் ரூபாய் அவருக்கு பிக்பாஸ் மூலம் வருமானம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ரியோவுக்கு ஒரு நாளைக்கு 35,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் 105 நாட்கள் இருந்ததால் அவருக்கு 36.75 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

ஆஜித்துக்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் சம்பளம் என்றும் 91 நாட்கள் இருந்ததால் அவருக்கு 13.65 லட்சம் ரூபாய் பிக்பாஸ் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுரேஷ், சோம், பாலாஜி ஆகிய மூன்று பேருக்கும் நாள் ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் கூறுப்படுகிறது. சுரேஷ் மொத்தம் 35 நாட்கள் இருந்ததால் அவருக்கு 3.50 லட்சம் ரூபாய் வருமானம் என்றும், சோம சேகர் மற்றும் பாலாஜி 105 நாட்கள் இருந்ததால் அவர்களுக்கு 10.50 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த பட்டியலை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் வீட்டில் அதிக டேமேஜ்ஜான போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜியின் ரொம்பவே குறைந்த சம்பளம் என தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.