சூர்யா தப்பு பண்ணிட்டாரு !! பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா

சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அறிமுகமாகி பிரபலமாவது கடினம். சில வாரிசு நடிகர்கள் நல்ல பெயரை பெற்று இருந்தாலும் பல நடிகர் மற்றும் நடிகைகள் சிறப்பாக சோபிப்பதில்லை.அதேசமயம்சினிமாவில் பல நடிகைகள் படவாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு சென்று ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள் அந்தவகையில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் ஸ்ரீ.இந்த படத்தில் பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான ஸ்ருதிகா நடித்து இருப்பார். 14 வயதிலேயே சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகினார். இப்படம் ஓரளவிற்கே வெற்றியை தந்தது.இந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையடுத்து தொடர்ந்து ஆல்பம், நள தமயந்தி போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தார். இவர் நடித்த தித்திக்குதே படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வாய்ப்புகள் குவிந்த நிலையில் தி டீரென படிக்கப் போவதாக சென்று விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டிகொடுத்து சினிமா அனுபவங்களையும் பரிமாறியுள்ளார். சூர்யாவுடன் ஸ்ரீ படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி தொகுப்பாளினி பார்வதி கேட்க, அதற்கு அவர் என் கூட சூர்யா சார் நடித்து தப்பு பண்ணிட்டாரு நந்தா படம் எவ்வளவு பெரிய ஹிட் அதற்கு பின் என்னுடன் நடித்தார் என்று கூறினார்.

படத்திற்கு பிறகு சூர்யா சாரை பார்க்கவே இல்லை சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். நண்பர்களுடன் மட்டும் தான் நேரத்தை செலவிட்டேன். மேலும் அவர் பெரும் அமைதியானவர், சிறிய பெண் என்பதால் பள்ளிக்கு சென்றியா என்று அக்கரையோடு கேட்பார் என்று சூர்யாவை பற்றி கூறியுள்ளார்.

Comments are closed.