காமெடி நடிகர் செந்திலா இது? மார்டன் உடையில் ஆளே மாறிட்டாரு போல ..!!இன்ப அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்..!!

காமெடி நடிகர் செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் தியதியில் இராமநாதபுரம் மாவட்டம்” மாவட்டத்தில் உள்ள என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு “மதுபானம்”மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான “மலையூர் மம்பட்டியான்”மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவரை இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.

காமெடி நடிகர் செந்திலின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.நடிகர் செந்தில் பிளாக் ஷீப் ஆரம்பிக்கவுள்ள ஆப் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.அதற்காக வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார். குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் நம்ப செந்திலா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.குறித்த புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Comments are closed.