லண்டன் வாழ் பெண்ணை மணப்பேன் என சத்தியமா நினைக்கல! ஈழப்பெண்ணிடம் காதலில் விழுந்த பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரியின் சுவாரஸ்யமான பக்கம்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் ஆரி. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.ஆரிக்கும், லண்டன் வாழ் ஈழத்து பெண்ணான நதியாவுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது, ஆரி – நதியாவின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது.இது குறித்து ஆரி மற்றும் நதியா முன்னர் ஒரு பேட்டியில் கூறியுள்ளனர்.அப்போது ஆரி கூறுகையில், நான் சத்தியமா லண்டன் பொண்னை மணப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை.நான் நடித்த மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தை நதியா பார்த்துவிட்டு அவங்க வீட்டில், நான் கல்யாணம் செய்து கொண்டால் இந்த பையனை தான் பண்ணுவேன் என விளையாட்டா சொல்லிருக்காங்க.

 

அதன்பிறகு இவங்களோட படிச்ச என்னோட நண்பர் நான் நடித்த படத்தை பற்றி சொல்லிருக்காங்க. அப்போது அந்த படத்தோட ஹீரோ என்னோட நண்பர் தான் என அவரும் சொல்ல, பிறகு நாங்களும் நண்பர்கள் ஆனோம் என ஆரி பேச குறிக்கிட்டு பேசினார் நதியா.

அவர் கூறுகையில், எங்களுக்குள்ள எப்போது காதல் வந்தது எனதெரிவில்லை. எனக்கு திருமணத்துக்காக குடும்பத்தார் மாப்பிள்ளை பார்க்க தொடங்கிய போது ஏன் நாம கல்யாணம் பண்ணிக்ககூடாது என தோணுச்சு. அதன்பிறகு எங்கள் வீட்டில் இதை நான் சொன்னேன்.இதை தொடர்ந்து ஆரிக்கு பல டெஸ்ட் வைக்கப்பட்டு அப்புறம் தான் அவரை குடும்பத்தார் ஓகே செய்தார்கள் என கூறினார்.


Comments are closed.