“சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்..” அடுத்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா? எத்தனை ஓட்டுன்னு பாருங்க மக்களே”

பிக் பாஸ் நிகழ்ச்சி சற்று சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் லிஸ்ட்டில் இருப்பவர்கள் 7 பேரும் இடம் பிடித்துள்ளனர்.கடந்த வாரம் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போதே பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியில்லாதவர்கள் என 8 பேரை சக ஹவுஸ் மேட்ஸ்கள் தேர்வு செய்தனர்.அதன்படி, சனம் ஷெட்டி, ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, ரம்யா பாண்டியன் ஆகிய 8 பேர் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்களின் பெயர்களை கூறி ஒவ்வோரு ஹவுஸ்மேட்டும் தலா இரண்டு பேரை நாமினேட் செய்யவேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் கன்ஃபெஷன் ரூமுக்கு சென்று சக ஹவுஸ்மேட்டுகள் இருவரை நாமினேட் செய்தனர்.

அதில் அதிகபட்சமாக சனம் ஷெட்டியைதான் ஹவுஸ்மேட்ஸ்கள் நாமினேட் செய்துள்ளனர். சனம் ஷெட்டி அதிகபட்சமாக 11 ஓட்டுகளை பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து ஷிவானி 6 ஓட்டுக்களை பெற்று எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார்.அவரை தொடர்ந்து சம்யுக்தா 5 ஓட்டுகளையும் நடிகை ரேகா 4 ஓட்டுக்களையும் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து கேப்ரில்லா, ஆஜித் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தலா 2 ஓட்டுகளை பெற்று எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார்.

ஏற்கனவே நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனதால் நாமினேஷன் புராசஸில் இருந்து தப்பித்துவிட்டார்.இந்நிலையில் அடுத்த வாரம் யார் வெளியேற போவது என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பத்துள்ளது. இப்போது தான் நிகழ்ச்சி சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

tamilglitz இணையத்தளம் நடத்திய கருத்துகணிப்பில் முதல் நாள் நிலவரப்படி ஷிவானி அதிக வாக்குகளில் முன்னிலையிலும்,சனம் ஷெட்டி கடைசி இடத்திலும் இருக்கிறார்..ஆனால் இன்றே கணித்துவிட முடியாது.நமது பிக் பாஸ்ஸில் கடைசியில் என்ன வேணுமானாலும் நடக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

 

Comments are closed.