மறைந்த பாடகர் SPB வீட்டின் ஒரு முக்கியமான அறை தற்போது எப்படியுள்ளது தெரியுமா? வியப்பை ஏற்படுத்தும் வீடியோ..!!

பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் வீட்டில் உள்ள ஒரு அறை முழுக்க அவர் குவித்த விருதுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் திகதி முதல் உ டல்ந லக்கு றைவு க்காக சி கிச் சை பெற்றுவந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 25ஆம் திகதி கா லமா னா ர்.இசைத்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள எஸ்பிபியின் உடல் முழு காவல்துறை மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.எஸ்பிபி 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இதோடு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

 

ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ள எஸ்பிபி கணக்கில் அடங்காத பல்வேறு மாநில விருதுகளை வென்றிருக்கிறார்.இந்த நிலையில் எஸ்பிபி வீட்டில் உள்ள பெரிய அறை முழுவதும் அவர் வாங்கியுள்ள விருதுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது, இதை பார்த்த பலரும் எஸ்பிபி இசைத்துறையில் எந்தளவுக்கு சாதனைகள் செய்துள்ளார் என்பதை பார்க்கவே வியப்பாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Comments are closed.