என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான்.. நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சொக்கி நிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே வைத்திருப்பவர் தான் நடிகை த்ரிஷா.
இவர், 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் சூர்யாவின் மெளனம் பேசியதே மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா, அடுத்தடுத்து அஜித், விஜய், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இதையடுத்து, த்ரிஷா திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகப் போகிறது. அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது 1999-ம் ஆண்டு அவர் வென்ற ‘மிஸ் சென்னை’ பட்டம்தான்.

அந்த பட்டம் வென்ற நாளை நினைவு கூறும் வகையில் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரிஷா, “30-09-1999, என் வாழ்க்கையை மாற்றிய நாள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.