புகைப்படத்தை வெளியிட்டு லொஸ்லியா பதிவிட்ட பதிவு… கவின் காதலுக்கு வைத்த முற்றுப்புள்ளி!

கடந்த ஆண்டில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதியில் காதலர்களாக வெளிவந்தவர்கள் தான் கவின், லொஸ்லியா. இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருவதுடன், இருவருக்கும் ஆர்மியும் உருவாகியுள்ளது. பிக்பாஸில் இருக்கும் போதே இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் இவரது தந்தை. ஆனால் தனது தந்தை சென்ற பின்னும் இவர்களது காதல் பிக்பாஸில் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.g

ஆனால் வெளியே வந்ததும் இருவரும் நேருக்கு நேராக எந்தவொரு சூழ்நிலையிலும் பேசிக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், லொஸ்லியா தனது புகைப்படத்தினை பதிவிட்டு, அதில் நான் காதலித்தேன்,

காயப்பட்டேன். பின்னர் தவறை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் கவினுடனான காதலில் முறிவு ஏற்பட்டுவிட்டதாக கூறி வருகின்றனர்.

Comments are closed.