முன்னாள் போட்டியாளரால் ஏற்படும் பிரச்சினை… பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படுமா?.. தீயாய் பரவும் காட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் சற்று பிரபலமடைந்தவர் தான் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது சேரன் மீது புகார் ஒன்றினை வைத்தார். ஆனால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 4ம் திகதி அல்லது 11ம் திகதி தொடங்கவிருப்பதாக எதிர்பார்த்து வரும் நிலையில் மீரா மிதுன், இந்நிகழ்ச்சினை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை ப ய ங் க ர மா க வசை பாடியுள்ளார். சமீப நாட்களாக பல முன்னணி பிரபலங்களைக் குறிவைத்து ச ர் ச் சை காட்சியினை வெளியிட்டு வரும் இவர் தற்போதும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த காட்சியில், சேரன் விவாகரத்தில் நடிகர் கமல் ஹாசன் தவறான முடிவை அறிவித்து தனது பிரபலத்திற்கு பா தி ப் பு ஏற்படுத்தியதாகவும். சேரன் தன்னிடம் த வ றா க நடந்த குறிப்பிட்ட காட்சி தனக்கு வேண்டும் என்றும் அது கிடைக்கவில்லை என்றால், இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடக்க விடாமல் ஸ்டே வாங்குவேன் என்றும் சவால்விட்டுள்ளார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க தகுதியே இல்லை என்றும் உங்களின் மகளின் படங்களும் வெளிவராது என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நடிகை மீரா மிதுன், அருண் விஜய் நடித்து வரும் ‘அக்னி சிறகு’ படத்தில் கமிட் ஆகி இருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக கமலின் மகள் அக்ஷரா ஹாசனை நடிக்கவைத்தினர். இதனால் கமல் தான் தனது பவரை பயன்படுத்தி தன்னை அந்த படத்தில் இருந்து நீக்கியதாக மீரா மிதுன் கு ற் ற ம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.