ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி ஜோடியின் அழகிய குட்டி தேவதையின் பெயர் என்ன தெரியுமா? முதன் முறை இணையத்தில் வெளியான புகைப்படம்

இசைமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜீவி. பிரகாஷ் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகி சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னரும் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களுக்கு பாடல் பாடிக்கொடுப்பது, இசையமைப்பது என இருவரும் கேரியரில் பிசியாக இருந்து வந்தனர்.இந்த நிலையில், கடந்த மாதம் தான் இந்த தம்பதிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்த செய்தி கோலிவுட்டில் அனைவரயும் கொண்டாடினார்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது இன்ஸ்டாகிராமில் மனைவி நிஷா மற்றும் சைந்தவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்
இதனையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்களின் குழந்தை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ என் இளவரசி” என்ற கேப்ஷனோடு, குழந்தைக்காக நடத்தப்பட்ட ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இதேவேளை, குழந்தைக்கு அன்வி என பெயர் சூட்டியுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது ரசிகர்களினால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

 

View this post on Instagram

 

Here is my princess #Anvi … @saindhavi_prakash @bhavanisre … photo by @mommyshotsbyamrita

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) on

Comments are closed.