புகழின் உச்சத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை… முதல் விமானபயணத்திற்கு தந்தை பட்ட கஷ்டம்!
உலகின் பல சாதனையாளர்களின் வெற்றிக்கதைகளை அவர்கள் மூலமாகவே கொண்டு சேர்க்கும் முயற்சியில் யூடியூப் இறங்கியுள்ளது.இதற்காக “Dear Class of 2020” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை யூடியூப் நடத்துகிறது. இதன் மூலம் பல சாதனையாளர்கள் தங்களது வெற்றிக்கதைகளை யூடியூபில் பேசி வருகின்றனர்.அந்த வகையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் பேசியுள்ளார். அதில் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல விஷயங்களை குறிப்பிட்டார்.
அவர் பேசும்போது, தான் முதன் முதலாக அமெரிக்கா வந்தது தொடர்பாக விவரிக்கையில், ’27 வருடங்களுக்கு முன்பு நான் படிப்பதற்காக அமெரிக்கா வந்தேன். நான் அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட்டிற்காக என் தந்தை கிட்டத்தட்ட அவரின் ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்.
அமெரிக்கா மிகுந்த செலவு மிகுந்த நாடு. நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் போன் பேச வேண்டுமென்றால் 2 டொலர்களுக்கு மேல் செலவாகும். நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்
Comments are closed.