ஊ ரடங்கில் தி டீர் ம ரணம் ச டலத்தை தூக்க கூட ஆள் இல்லை தனி ஆளாக இ றுதிச்சடங்கு செய்த மூத்த மகள் – நெ ஞ்சை உ லுக்கும் ச ம்பவம்…!
உடல்நலக்குறைவால் இறந்த முதியவருக்கு இறுதி சடங்கு செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினர் உதவிய நெகிழ்வான சம்பவமானது சென்னை வில்லிவாக்கத்தில் அரங்கேறியுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் ராஜமங்கலம் 5-வது தெரு என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சாந்தியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மொத்தம் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். சாந்தியம்மாளின் கணவரான ஏழுமலை பல ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இவருடைய 3 பெண்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மூத்த மகளான ராஜேஸ்வரி 2 குழந்தைகளுக்கு தாயாவார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சாந்தியம்மாள் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு கடந்த சில மாதங்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உடல்நலம் தேறி விட்டதாக கூறி ஏப்ரல் மாதம் இறுதியில் சாந்தியம்மாளை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி வீட்டிற்கு வந்த சாந்தியம்மாள் நலமுடன் இருந்துள்ளார். ஆனால் 2-ம் தேதி இரவு ஒன்று அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
செய்வதறியாமல் ராஜேஸ்வரியும் அவருடைய சகோதரியும் திகைத்து போயினர். அடுத்த சில நிமிடங்களிலேயே சாந்தியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். ஊரடங்கு காலமென்பதால் உறவினர்கள் யாவரும் செய்தியை கேட்டு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் ராஜேஸ்வரியிடம் வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ரங்கநாதனின் தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளனர்.
உடனடியாக ராஜேஸ்வரி அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தன்னுடைய நிலையை இராஜேஸ்வரி கூறியபோது ரங்கநாதன் அவர்கள் ராஜேஸ்வரிக்கு சமாதானம் தெரிவித்துள்ளார். பின்னர் உடனடியாக ராஜேஸ்வரியின் வீட்டிற்கு அருகேயுள்ள கட்சிக்காரர்களிடம் பணம் மளிகை பொருள் அரிசி முதலியவற்றை கொடுத்து அனுப்பி உதவியுள்ளார்.
பின்னர் கட்சிக்காரர்களே இறுதி சடங்கு ஏற்பாடுகளை நாதமுனி பகுதியிலுள்ள மயானத்தில் ஏற்பாடு செய்தனர். சாந்தியம்மாளுக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தினால், ராஜேஸ்வரியே இறுதி சடங்கு செய்துள்ளார்.
Comments are closed.