தொகுப்பாளினியாக பயணத்தை ஆரம்பித்த நடிகை தேவதர்ஷினி..!! தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா..!அ திர்ச் சி அடைந்த ரசிகர்கள்..!!
நடிகை தேவதர்சினி பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சித் தொடர்களின் வழியாகவே புகழின் உச்சம் சென்றவர்.
குணச்சித்திர, காமெடி வேடங்களுக்குப் பெயர்போன அவர், அறிமுகமானது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக.தற்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடுவராகவும் இவரை காணலாம். இவரின் வாழ்க்கை பாடம் எல்லா நடிகைகளுக்கும் எடுத்து காட்டாக திகழ்கின்றது.நகைச்சுவை கதா பாத்திரமாகவே பல ரசிகர்கள் கண்ணுக்கு தெரியும் இவர் ஒரு தொகுப்பாளினி.அவரின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 1997இல் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்தவர் ஜெ.ஜெ டி.வி, சன் டி.விகளின் நிகழ்ச்சிகளைத் தொகுக்கத் தொடங்கினார். இதுதான் இவரின் ஆரம்ப கட்ட வாழ்க்கை. சென்னையில் இருப்பவர்களே, ‘என்னது நடிக்கப்போறியா..?’ என ஆச்சர்யமாகக் கேட்கும் காலம் அது.எத்திராஜ் கல்லூரிப் பெண்கள் இதில் கொஞ்சம் முன்னேறிப் பொதுச் சமூகக் கட்டுகளை உடைத்து வெளியே வரத் தொடங்கினார்கள்.
சன் டி.வியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்த உமா பத்மநாபன் இவரது புகைப்படம் கேட்கவும் கொடுத்திருக்கிறார். கவிதாலயா கிருஷ்ணன் இவரது புகைப்படம் பார்க்க, ‘கனவுகள் இலவசம்’ வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.‘மர்மதேசம்’ சீரியல் இவரது திரைப் பயணத்துக்கான திறவுகோல். பள்ளி, கல்லூரியில் முதல் மாணவியாகத் திகழ்ந்தவர் ஆடிட்டர் கனவைத் தள்ளிப் போட்டுவிட்டு சின்னத்திரையில் தடம் பதிக்கத் தயாரானார்.
தந்தை கல்லூரி முதல்வர், தாய் பள்ளி முதல்வர் என ஓரளவுக்கு பிரச்சினை இல்லாத சூழல் என்பதால் கனவை நோக்கிய பயணம் தெளிந்த நீரோடையைப் போல் ஆனது.ஆடிட்டர் கனவை எப்போதும் எட்டலாம் என நடிக்கத் தொடங்கியவர், இப்போது சைக்காலஜி படித்திருக்கிறார். நடிப்புக்குப் பிறகு ஆடிட்டிங்கில் இறங்கும் எண்ணமும் இருக்கிறதாம். கனவுகள் இலவசம்’ தொடர் சிறியது என்பதால் விடுமுறை நாள்களில் நடிப்பதே போதுமானதாக இருந்திருக்கிறது.
ஆனால், ‘மர்மதேசம்’ ஒன்றரை ஆண்டு தொடரும் சீரியல். கல்லூரி முடித்ததும் மாலை வேளைகளில், கல்லூரி விடுமுறை நாள்களில் நடிக்க ஆரம்பித்தவர். பிறகு நடிப்பை முதன்மையாக்கி தொலைநிலைக் கல்வியில் எம்.காம் படிக்கும் நிலை உருவானது. ஆரம்ப காலத்தில் ஃப்ரேம் பொசிஸனுக்குள் நிற்கத் தெரியாது… ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் சரியாக வராது.டயலாக் டெலிவரியை மட்டுமே கையில் இருக்கும் அம்பாக நினைத்துத் திரைநாணேற்றினார்.
அத்தனையையும் கற்றுக்கொண்டது அதன்பிறகுதான்.நடிக்கப் போவது, அலுவலகத்துக்கு தினமும் வேலைக்குப் போவதைப்போல அத்தனை எளிதானதொன்றுமில்லை.திரையுலகின் மீதான ப்ரியம் எல்லாவற்றையும் தாங்க வைத்தது. ‘மர்மதேசம்’ ஷூட்டிங்கில் பார்த்த நடிகர் சேத்தனை 2002ல் கரம்பிடித்தார்.இவரின் பயணத்திற்குப் பின்னே இவரது கணவரும் உடன் நிற்கிறார்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா’ நகைச்சுவைத் தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார்.தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. வீட்டிலிருக்கும் பெண்கள் தேவதர்ஷினியைத் தங்களுடைய விம்பமாகவே பார்க்கத் தொடங்கினார்கள்.சின்னத்திரையில் மின்னிய காலத்தில் சினிமா வாய்ப்புகள் வந்தாலும், நேரமின்மையால் தள்ளிப்போட்டவருக்கு ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் அடித்தளமாகிறது.
முதல் படத்திற்கே தமிழ்நாடு அரசின் விருது பெறுகிறார். ‘காக்க காக்க’, எனக்கு 20 உனக்கு 18′ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.சினிமாவில் நிகழ்கிற ஒரு துன்பியல் உண்மை… ஒரு வருடம் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தாலே போதும்… ‘அவங்க இப்போ நடிக்கிறதையே விட்டுட்டாங்களே’ எனக் கிளப்பிவிட்டு விடுவார்கள்.அவற்றையெல்லாம் கடந்துவந்து தன்னை நிரூபிக்க நிறையப் போராட வேண்டியிருக்கும்.
20 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இப்போதும், சின்னத்திரையில் காமெடி ஷோவில் தொடர்ந்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.திரைப் பயணத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் திறம்படக் கையாண்டு வாள் சுழற்றுகிறார்.ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர், 2010இல் ‘காஞ்சனா’ திரைப்படத்தில் கோவை சரளாவோடு கரம் கோர்த்தார்.தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் ‘காஞ்சனா’ திரைப்படத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நகைச்சுவை நடிகை’ விருதை தட்டிச் சென்றார்.
கிடைக்கும் ஒன்றிரண்டு திரைப்படங்களில் தலைகாட்டிக் காணாமல்போகும் நடிகைகள் என நிறைய பேரை உதாரணமாகச் சொல்லலாம்.இந்த நிலை மாறி, நகைச்சுவை நடிகைகளுக்கும் சிறந்த ஓர் இடம் எப்போதும் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார் தேவதர்ஷினி.வாய்ப்புகள் எப்போதாவதுதான் தேடிவரும்.
கிடைக்கிற வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்து மேலேறினால் வெளிச்சம்.கண்கூசும் வெளிச்சத்திற்குத் தாக்குப்பிடித்து நிலைபெறுவது அவரவர் திறமை. பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதுதான் இவரது அனுபவங்கள் சொல்லும் பாடம்.
Comments are closed.