பிச்சைக்காரனை கூட ஹீரோவாக்குவேன்.? ஆனால், உன்னை வைத்து படம் எடுக்க மாட்டேன்..!! 18 வருடங்களாக தீராத இயக்குனரின் பகை..!!

இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் தமிழ் சினிமாவுக்கு ஒரு திருப்புமுனை இயக்குனராக ஒரு சமயத்தில் திகழ்ந்து வந்துள்ளார். இவர் இயக்கிய காலகட்டத்தில் ஹீரோவை நம்பி படம் வெற்றி பெறுவது கிடையாது.

 

இவருடைய கதையை நம்பி தான் படம் வெற்றி பெறும் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் கண்டிப்பாக வெற்றி பெற்ற ஒரு படமாக தான் அமைந்துள்ளது. அதே போன்று இவரது திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு இருக்கும்.

 

அப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 18 வருடங்களாக திரைப்படத்தில் எதுவும் இயக்காமல் இருந்து வருகின்றார். மேலும், இயக்காமல் இருக்க காரணம் சரத்குமார் தான் என்று கூறியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா மற்றும் சரத்குமார் தகப்பன் சாமி என்ற பெரிய ஒரு திரைப்படம் உருவாக இருந்தது.

 

அந்த திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிப்பதாக முதல்கட்ட வேலைகள் படப்பிடிப்பு தயாராக இருந்த நேரத்தில் காவிரி பிரச்சனை வந்துள்ளது. அதில் நடிகர் சரத்குமாருக்கு பாரதிராஜாவுக்கு இடையே

 

பல கருத்து வேறுபாடு காரணம் ஏற்பட்டது. இதனால் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசியுள்ளார்கள். அதன் காரணமாக அந்த சண்டை பெரிதாக ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே

 

மரியாதை இல்லாத அளவிற்கு பேசிக் கொண்டார்கள். அதன் அடிப்படையில் தான் பாரதிராஜா தெரிவித்துள்ளார். நான் ஒரு பிச்சைக்காரனை வைக்க கூட படம் எடுப்பேன்.. ஆனால், உன்னை வைத்து நான் படம் எடுக்க மாட்டேன் என்று பேசியதாக சமூகத்தில் கூறியுள்ளார்கள்…

 

Comments are closed.