என் மனைவியை கூட மறந்து விடுவேன்.? ஆனால், இந்தப் பெண்ணை மறக்க மாட்டேன்.? திடீரென்று பரபரப்பு ஏற்படுத்தி தனுஷ்..!!

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் பல தோல்வி திரைப்படத்தை கொடுத்தும் கேவலமாக பலரும் பேசி வந்தாலும் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இவர் தனது நடிப்பின் மூலம் மட்டும் பலரின் தவறாமல் இயக்குனராகவே தயாரிப்பாளராக எழுத்தாளராகவும் பாடல் ஆசிரியராகவும் மனம் வந்து கொண்டிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வாத்தி.

 

இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது மேலும் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது இவர் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கின்றது இதற்கு அடுத்தபடியாக இவருடைய ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 

மேலும், இவர் ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பொழுது நான் நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்தை படபிடிப்பின் பொழுது

 

தனக்கு நடந்த அனுபவத்தை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். நான் படபிடிப்பின் ஒரு நாள் ஓரமாக உட்கார்ந்து இருந்த பொழுது ஒருவர் இந்த படத்தின் யார் ஹீரோ என்று கேட்டார் உடனடியாக மற்றொருவர் என்னை கைகாட்டினார்கள்.

 

அவர்கள் என்னை பார்த்தவுடன் பலரும் கலாய்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பள்ளி மாணவி ஒருவர் அங்கே வந்து எனக்கு கை கொடுத்து உங்களுடைய துள்ளுவதோ இளமை படத்தை நான் பார்த்துள்ளேன் எனக்கு ரொம்ப பிடித்திருக்கின்றது.

 

உங்களுடைய நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும், நான் கண்ட முதல் பெண் ரசிகை என்றால் அது அந்த பெண்ணை தான் சொல்வேன். அவரை இன்று வரை நான் மறந்துவிட மாட்டேன் என்று உணர்ச்சி பூர்வமாக நடிகை தனுஷ் சமீபத்தில் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.