20 வருடத்தில் விஷால் செய்யாத சாதனை.? 10 வருடத்தில் செய்து காட்டிய இளம் நடிகர்..!! இத்தனை ஆண்டு சினிமாவில் இருந்து என்ன பிரயோஜனம்.?

நடிகர் விஷால் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லமே என்ற திரைப்படத்தில் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி உள்ளிட்ட அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் ரசிகன் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அரசியலில் நுழையப் போகின்றேன் என்று சொல்லி பல சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். அதன் பிறகு நடிகர் சங்க கட்டடத்தை கட்டி பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி வருகின்றார்.

 

இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படத்தின் மட்டும் நடித்துக் கொண்டு இன்னும் சினிமாவில் இருந்து வருகின்றார். மேலும், இவர் 20 வருடத்தில் செய்த சாதனையை நடிகர் சிவகார்த்திகேயன் 10 வருடத்தில் செய்துள்ளார். அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த

 

திரைப்படம் தான் மெரினா. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பிறகு எதிர்நீச்சல், மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் பாடல்களை எழுதுவது, அதனை பாடுவது போன்ற அடுத்தடுத்து தனது வளர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார். மேலும், நடிகர் விஷால் முப்பதற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்திருந்தாலும்

 

நடிகர் சிவகார்த்திகேயன் இடத்தை இவர் பிடிக்க முடியவில்லை என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதற்கு காரணம் அவருடைய தவறான கதை தேர்வு தான் என்று கூறப்படுகின்றது…

 

Comments are closed.