16,000 அடி உயரத்தில் நடுவானில் பயணிகளுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்த தமிழன்..! என்ன செய்தார் தெரியுமா..? சிலிர்க்க வைக்கும் வீடியோ உள்ளே..!

இந்தியாவில் விமானங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அறிவிப்புகள் செய்யப்படுவது வழக்கம். தமிழகத்தில் தமிழில் அறிவிப்புகள் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் indigo விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்று தற்போது நடந்துள்ளது.வட சென்னையை சேர்ந்த பிரிய விக்னேஷ், indigo விமானத்தில் கேப்டனாக இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்புகள் செய்துள்ளார்

இவரது இந்த வீடியோ வைரலாகி வருகிறது, அதில், ‘திருச்சி நகரத்தில் 16,000 அடி உயரத்தில் நாம் பறந்துகொண்டிருக்கிறோம். இன்னும் பத்து நிமிடத்தில் காவேரி ஆறு, காவேரி, கொள்ளிடம் என பிரியும் இடத்தைக் காண முடியும். இந்த இரண்டு ஆறுகளும் பிரியும் இடத்திலுள்ள இடத்துக்கு ஸ்ரீரங்கம் என்று பெயர். நீங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைக் காண காணலாம்’ என்று அழகுத் தமிழில் பேசியுள்ளார். இந்நிலையில் தமிழில் பேசியது குறித்து அவர் தி இந்து-வுக்கு அளித்த பேட்டியில்,

இந்த தமிழ் வர்ணனை குறித்து “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர் “இப்படி செய்ய வேண்டும் என எனக்கு தூண்டுதலாக இருந்தவர் கேப்டன் சஞ்ஜீவ்குமார் தான். அவர்தான் என்னுடைய குரு என சொல்லலாம். அவர் விமானத்தை இயக்கும்போது சில முக்கிய இடங்கள் குறித்து சொல்லிக்கொண்டே வருவார், அதனை பயணிகளையும் குறிப்பெடுத்துக்கொள்ள அறிவுறுத்துவார். அவர் ஒரு நீர் நிலைகளை கூட விடமாட்டார்” என்றார். அவர் பேசிய அந்த வீடியோ இதோ

 

Comments are closed.