விஜய்யை தவிர மற்ற ஹீரோக்களுக்கு ஓகே சொல்லும் ஜோதிகா.. என்ன பிரச்சனை இருவருக்கும்!
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக வலம் வருகிறார். விஜய்யுடன் ஜோடி போட இளம் நாயகிகள் முதல் மூத்த நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.ஆனால் விஜய் படங்களில் நடிக்க மாட்டேன் என ஜோதிகா கூறியுள்ளது பலரையும் அ திர்ச்சி அடைய வைத்துள்ளது. விஜய், ஜோதிகா நடிப்பில் உருவான குஷி, திருமலை படத்திற்கு பிறகு இருவரும் இணையவில்லை.
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் நித்யா மேனன் நடித்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு முதலில் ஜோதிகாவிடம் தான் பேசப்பட்டது.
ஆனால் விஜய்யுடன் ரொமான்ஸ் செய்ய மாட்டேன் என மறுத்துவிட்டார் ஜோதிகா. ஆனால் அதன்பிறகு அறிமுகமே இல்லாத பெரிய அளவு ரீச் இல்லாத கதாநாயகர்கள் கூட ரொமான்ஸ் பண்ணினார்.
சூர்யாவுக்கும் விஜய்க்கும் ஈகோ பிரச்சனை என பல காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால் இருவரும் நண்பர்கள் தான் என்பதை பல மேடைகளில் நிரூபித்துள்ளார்கள்.
ஜோதிகா விஜய்யின் படங்களை தொடர்ந்து நிராகரித்து வருகிறார். அதுவுமில்லாமல் மூத்த நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்யும் கதாபாத்திரங்களில் இனி நடிக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். விஜய் படங்களை பார்பதையும் விட்டுவிட்டார். அதேசமயம் தற்போது மிகப்பெரிய சம்பளத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளது. அதே போன்ற கதாபாத்திரத்தில் தான் மெர்சல் படத்தில் நடிக்க மாட்டேன் என ஒதுங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed.