ஏர் ஆர் ரகுமான் மனைவி மகள் யார் தெரியுமா?? இவ்வளவு அழகிய மனைவி மகளா பலர் கண்டிராத புகைப்படம்!!
அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன.
முத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க இவரின் மதம் இஸ்லாம் இருக்கின்ற காரணத்தால் இவரது மனைவி மகளின் புகைப்படங்கள் இணையத்தில் காண்பது அரிதான காரியம் அவ்வாறு இவர் வெளியில் வருகின்ற வேளைகளில முகங்களை மற்றவர்கள் பார்க்காதவாறு மூடியவாறே வருவார்கள் இந்த வகை லாகடவுன நேரத்தில் ரகுமானும் அவரது மனைவியும் சமீபத்தில். எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அட இதுதான் ஏ ஆர் ரஹ்மான் மனைவியா ஒன்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.
Comments are closed.