வளரும் குழந்தையை பற்றியும் கணவரை பற்றியும்.. நெ ஞ்சை உருக்கும் முதல் பதிவை வெளியிட்ட மனைவி மேக்னா
பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகனும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த 7ம் தேதி ம ரணமடைந்தார். இதனால் பல திரைப்பிரபலங்களும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான இவர், வாயுபுத் ரா என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும், கண்டேதே, சிர்ரு, தடம் தசகுணம், கெம்பே கவுடா, பையா ரீமேக்கான அஜித் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது நான்கு படங்களில் நடித்து வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர இருந்தது.
இதையடுத்து, அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர் தொடர்ந்து மனமுடைந்தே காணப்படுவதாக கூறுகிறார்கள். மேக்னாவும் அவருடன் 10 வருடங்களாகக் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேக்னாராஜ், தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து மேக்னா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரை பற்றி பகிர்ந்துள்ளார். அதில், “சிரு, நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்ததை வார்த்தைகளாக்கிச் சொல்ல மீண்டும் மீண்டும் முயல்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகத்திலிருக்கும் அத்தனை வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவரிக்க முடியாது.
என் நண்பர், என் காதலர், என் கூட்டாளி, என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் – இதெல்லாவற்றையும் விட மேலானவர் நீங்கள்.
என் ஆன்மாவின் ஒரு பகுதி நீங்கள். ஒவ்வொரு முறையும் நான் வாசல் கதவைப் பார்த்து, நீங்கள் உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதைப் பார்க்க முடியாதபோது இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வ லி என் ஆன்மாவைத் தாக்குகிறது.
ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உங்களைத் தொட முடியாததை உணரும்போது என் இதயத்தில் எல்லாம் மூழ்கும் ஒரு உணர்வு. ஆனால், உடனடியாக நீங்கள் என்னருகில் இருப்பது போல ஒரு மாய மந்திரத்தை உணர்கிறேன். நான் சோர்வடையும் போதெல்லாம் நீங்கள் என்னைக் காக்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அவ்வளவு காதலித்திருப்பதால் தான் உங்களால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை.இல்லையா? நம் காதலின் சின்னமாக, நீங்கள் எனக்குத் தந்த விலை மதிக்க முடியாத பரிசுதான் நம் குழந்தை.
அந்த இனிய அற்புதத்துக்கு நான் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன். உங்களை நம் குழந்தை வடிவில் மீண்டும் இந்த பூமிக்குக் கொண்டு வரும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.மீண்டும் உங்களைத் தாங்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் புன்னகையைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறையையே ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
நீங்களும் அந்தப் பக்கம் எனக்காகக் காத்திருங்கள். என் சுவாசம் இருக்கும்வரை நீங்கள் வாழ்வீர்கள். நீங்கள் என்னுள் இருக்கிறீர்கள். ஐ லவ் யூ”. இவ்வாறு மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார்.
Comments are closed.