43 வயதிலும் உடம்பை குறைத்து ந ச் சுன்னு இருக்கும் நடிகை மீனா !! எப்படி இருக்காங்கன்னு பாருங்க !!
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி என்றால் நடிகை மீனாவைதான் படக்கென சொல்வார்கள். தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அதே ரஜினியுடன் டூயட் பாடும் அளவுக்கு சினிமாத்துறையில் கோலோச்சினார்.
1982ல் வெளியான ‘’நெஞ்சங்கள்’’ படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மீனா. தொடர்ந்து வந்த அன்புள்ள ரஜினிகாந்த், நடிகை மீனாவுக்கு நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. 1991ல் ‘என்ராசாவின் மனசிலே’ படத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக அறிமுகம் ஆன மீனா, 90களின் கனவு தேவதையாக வலம்வந்தார்.
திருமணத்துக்கு பின்னர் சிலகாலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர், இப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக தரிசனம் தருவதோடு, மீண்டும் நடிக்கவும் தொடங்கி இருக்கிறார்.நடிகை மீனாவைப் போலவே அவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். தெறிப்படத்தில் இளையதளபதி விஜயின் மகளாக நடித்தார்.
நடிகை மீனாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. அவர் அண்மையில் நடத்திய போட்டோ சூட் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்ப்பவர்கள் அடடே நடிகை மீனா 43 வயதிலும் இவ்வளவு அழகா என உச் கொட்டுகின்றனர்.திருமணத்துக்குப் பின்னர் கணிசமாக உடல் எடை கூடிய நடிகை மீனா இப்போது நச்சென்று உடலைக் குறைத்திருக்கிறார். குறித்த அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் நடிகை மீனா, இப்போதுள்ள நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஜொலிப்பதாக கமெண்ட் செய்துள்ளனர். முத்து படத்துக்குப்பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார் மீனா. இதில் அவருக்கு கிராமத்து பெண் பாத்திரம் எனவும் கூறப்படுகிறது.
Comments are closed.