விஜய் சினிமாவில் செய்ததை அப்படியே அரசியலில் செய்யணும்.? கனிமொழி கொடுத்த பேட்டி..!!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நேரத்தில் இவர் திடீரென்று சினிமாவிலிருந்து விலகப் போவதாக தெரிவித்த நிலையில் அரசியலுக்கும் வருவதாக அவர் அதிகாரபூர்வமான
அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது கட்சியே ஒன்று தொடங்கி உள்ளார். அதற்கு பெயரும் வைத்து முதல் அரசியல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.. மாநாடு நடத்த இடம் கொடுக்க விடாமல் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் தற்பொழுது சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் திமுகவை சேர்ந்த எம்பி கனிமொழி ஒரு பெட்டியில் பேசும்பொழுது அவரிடம் விஜய்க்கு என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.. அதற்கு விஜய் நான் சிறுவயதிலிருந்து பார்த்து வருகிறேன்..
அவருடைய குடும்பத்துடன் நான் பழகி இருக்கிறேன் தெளிவாக மற்றும் கடின உழைப்பும் இருந்ததால்தான் அவரால் சினிமாவில் இவ்வளவு பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அதேபோல் அரசியலிலும் அவர் பயணிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது…
Comments are closed.