சந்திரலேகா படத்தில் இந்த காட்சியை மூன்று மாதங்கள் எடுத்தார்கள்.. 1948-ல் வந்த பிரம்மாண்ட காட்சி..!!

இயக்குனர் எஸ் எஸ் வாசன் என்பவர் இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சந்திரலேகா. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியை எடுப்பதற்கு மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். மேலும், பொதுவாக இந்த படத்தை பல ஆண்டுகளாக கூட

 

இயக்கி வந்துள்ளார்கள் என கூறப்படுகிறது. மேலும், இந்த காலகட்டத்தில் ஒரு படத்தில் சில மாதத்திலேயே எடுத்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.. ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் அப்படி கிடையாது ஒரு காட்சி எடுப்பதற்காக பல நாட்கள்

 

பல மாதங்கள் காத்திருந்தார்கள்.. அந்த வகையில் அந்த படத்தில் ஒரு ட்ரம் டேன்ஸ் காட்சிக்கு அதிகமான வெயில் தேவைப்பட்டது. அதனால் வெயில் வரும் நேரத்தில் மட்டுமே அந்த காட்சியை எடுக்க முடியும் இப்பொழுது இருக்கும் வசதிகள் எதுவும் அப்பொழுது இல்லை..

 

அதனால் பத்து மணிக்கு மேல் வெயில் வந்தவுடன் ஆரம்பித்து மூணு மணி வரை படப்பிடிப்பை கொடுப்பார்கள். அந்த நேரத்தில் வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் பலருக்கும் அடிக்கடி மயக்கம் ஏற்படுவது வாந்தி வருவது என பல தடைகள் மீறி மூன்று மாதங்கள்

 

அந்த காட்சியை எடுக்கப்பட்டது. மேலும், 1948 இல் ஆண்டில் வந்த ஒரு பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தின் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது அந்தக் காட்சி இன்று வரையும் பல பிரபலங்களால் புகழப்பட்டு வருவதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.