பண்ணை வீட்டில் நடந்த எஸ்பிபியின் மூன்றாவது நாள் சடங்கு… தழுதழுத்த குரலில் சரணின் முக்கிய அறிவிப்பு

மறைந்த எஸ்பிபியின் மூன்றாம் நாள் சடங்குகள் அவரது தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து எஸ்பிபியின் மகன் சரண் பேசுகையில், தனது தந்தைக்காக பிரார்த்தனை அத்தனை உள்ளங்களுக்கும் தான் எவ்வாறு நன்றிக்கடன் செய்யப்போகிறேன்.

தற்போது தனது தந்தை தாமரைப்பாக்கம் தோட்டத்தில் ஓய்வு எடுக்கிறார் என்று மிகவும் தழுதழுத்த குரலில் பேசியதோடு, காவல்துறையினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தந்தை மக்களின் சொந்தாக மாறிவிட்டார். அவருக்காக நினைவு இல்லம் கட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாகவும், இதன் முழு தகவலை ஒரு வாரத்தில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.