நள்ளிரவில் நடந்த கொண்டாட்டம்! விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அ தி ர் ச்சியில் பூ ரித்து போன தருணம்

5 வருடத்திற்கு முன்பு நானும் ரெளடி தான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே ஏற்பட்ட காதல் இன்று வரை தொடர்ந்துவருகின்றது. படப்பிடிப்பு மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா வரை இருவரும் ஒன்றாகவே சேர்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் திருமணம் மட்டும் எப்போது இன்னும் கூறாமல் ரசிகர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி வருகின்றனர்

கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த நயனும், விக்கியும் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டத்திற்காக தனி விமானம் மூலம் கொச்சி சென்ற போட்டோஸ் வெளியானது.
அங்கு தடபுடலாக ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர, அவை தாறுமாறு வைரலாகின.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று அவரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றார். அவருக்கு இன்ப அ தி ர்ச்சி கொடுக்கும் விதத்தில் காதலியான நயன்தாரா சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அழகான கேக் மற்றும் இசை குழுவுடன் வீட்டை பல வண்ண விளக்குகளுடன் அலங்கரித்துள்ளார்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பகிர்ந்துள்ளார்.இதேவேளை, ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Awwwww! Nayannnn at the end with that smile. 🤩🥺❤ #HBDVigneshshivan #LadySuperstar #nayanthara #VikkyNayan

A post shared by Nayantharateam ✨ (@nayantharateam) on

Comments are closed.