ரூ. 80 கோடி சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை காஞ்சனா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

பழம்பெரும் நடிகை காஞ்சனா 1960 மற்றும் 70-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தவர். இப்போது இவருக்கு 79 வயது ஆகிறது.
பல வருடம் திரைப்படத்தில் தலைக்காட்டாமல் இருந்த இவர், சமீபத்தில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் கதாநாயகனுக்கு பாட்டியாக நடித்திருந்தார். இந்நிலையில், பிரபல நாளிதழுக்கு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும், சினிமா வாழ்க்கையின் மலரும் நினைவுகள் பற்றியும் பகிர்ந்துள்ளார்.

‘விமான பணிப்பெண்ணாக இருந்த என்னை இயக்குனர் ஸ்ரீதர் அவர் இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். என்னை தற்போது வரை பலருக்கும் காஞ்சனா என்று தான் தெரியும். ஆனால் என்னுடைய உண்மையான பெயர் வசுந்தரா தேவி. நடிகை வைஜெந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் எனது பெயரை காஞ்சனா என ஸ்ரீதர் மாற்றினார்.

1964-ல் அந்த படம் வெளியான பிறது, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படவாய்ப்புகள் குவிந்தது. 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கி போட்டு இருந்தேன். அந்த சொத்துகளை எனது உறவினர்கள் என்னை எ ம் மா ற் றி அ ப க ரி த்துக் கொண்டனர். அவற்றை மீட்க கோர்ட்டு வ ழக்கு என்று பெற்றோருடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பது வெங்கடாஜலபதுக்கு எழுதி வைப்பதாக வேண்டி கொண்டிருந்தேன்.

ஆண்டவன் அருளால் வ ழக்கில் வென்று சொத்துக்கள் மீண்டும் என்னுடைய கையுக்கு வந்தது. இதனால் நான் வேண்டிக்கொண்ட படி, 80 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிட்டேன். நான் திரைப்படத்தில் ஓய்வு இல்லாமல் நடித்து கொண்டிருந்ததால், எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதையே என் பெற்றோர் மறந்து விட்டனர். நானும் திருமணம் செய்து கொள்ளமல்லேயே இருந்து விட்டேன்.

இப்போது என்னுடைய தங்கை ஆதரவில் இருக்கிறேன். நான் வருமானம் இல்லாமல் க ஷ் டப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை . எனது தங்கை என்னை நன்றாக பார்த்து கொள்கிறார்.
தற்போது என்னுடைய கவனம் முழுவதையும் ஆன்மீக ஈடுபாடுகளில் காட்டி வருகிறேன். தினமும் காலையில் எழுந்து ஏழுமலையான் தரிசனம், யோகா என என்னை பு த்துணர்ச்சியாக வைத்திருக்கிறேன். கடவுளிடம் இன்னொரு பிறவி மட்டும் வேண்டாம் என வேண்டி கொள்கிறேன் என காஞ்சனா தன்னை பற்றி தெரிவித்துள்ளார்.

Comments are closed.