நடிக்க முடிவெடுத்த பிரபு..!! முதல் படத்திற்காக தந்தையிடம் ஆசீர்வாத வாங்காத பிரபு..!! பெரியப்பாவிடம் தான் நான் ஆசீர்வாதம் வாங்கினேன்.?

தமிழ் சினிமா உலகில் இன்றும் மறக்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர் தான் மறைந்த சிவாஜி கணேசன் என்பவர். இவரின் அடிபில் ஏராளமான திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படங்களாக அமைந்துள்ளது நடிப்பிற்கு இவர் தான் நாயகன் என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார்.

 

இவரைப் போன்று இன்றுவரை எந்த ஒரு நடிகராகும் நடிக்க முடியவில்லை என்றுதான் பலரும் தெரிவித்து வருகிறார்கள். இவருடைய மகன் தான் பிரபு என்பவர் அவர் வெளிநாட்டில் படித்துள்ளார். அவரை போலீஸ அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், பிரபுவுக்கு நடிகராக வேண்டும் என்று தான் ஆசையாக இருந்தது.

 

இவர் சினிமாவுக்கு வருவது நடிகர் சிவாஜிக்கு பிடிக்கவில்லை.. ஆனால், சினிமாவும் இவரை விடவில்லை.. பிரபுவை நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தனர். சிவாஜியோ மறுத்துக் கொண்டே வந்தார் அதன் பிறகு அமரா காவியம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், சிவாஜி விடவில்லை அதேபோல் சங்கிலி என்கின்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

 

அதன் பிறகு அவரை நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்த முதல் படத்திலேயே சிவாஜியுடன் சண்டை போடு வேடம் வந்தது. அதில் தைரியமாக நடித்துள்ளார். அந்த திரைப்படம் ஹிட்டாக ஆனதற்கு அதன் பிறகு வாய்ப்புகள் வந்தது 80களில் பல படங்களில் நடித்து அதன் பிறகு 90களில் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் கதாநாயகனாகவும் குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய முதல் படத்தில் ஒப்பந்தமான பிறகு ஒரே நாளில் இவருக்கும் அவரது தந்தை சிவாஜி கணேசனுக்கும் ஒரே நாளில் படபிடிப்பு வைத்துள்ளார்கள்.

 

அப்பொழுது அப்பா நீங்கள் முன்னாடி போங்க நான் பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டார். சிவாஜியா அதற்கு இன்று உனக்கும் எனக்கும் ஒரே காட்சி இருக்கிறது என்று சொன்னவுடன் நீங்க போங்க நான் வருகிறேன் என்று சொன்னார். அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து வந்துள்ளார். அப்பொழுது சிவாஜி எங்கே போனாய் டா என்று கேட்டதற்கு

 

நான் பெரியப்பாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கி விட்டு வந்தேன் என்று கூறியுள்ளார். அவர் பெரியப்பா என்று சொன்னது வேறு யாரையும் கிடையாது எம்ஜிஆரை தான் சிவாஜியும் எம்ஜிஆரை அண்ணா என்றுதான் அழைப்பார். அதனால், தான் அவர் அப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.