வாழ்க்கை முழுவதும் இதை நினைத்து வருத்தம் இருக்கும்.? விஜயகாந்தை நினைத்து உருகிய ரம்பா..!!

நடிகர் விஜயகாந்த் மறைவு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஏராளமான மக்கள் மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இவர் மறைந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இவரது நினைவிடத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும்

 

பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தி சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரம்பா இவர் இன்று தனது கணவர் மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோருடன்

 

சேர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், அங்கிருந்த விஜய்காந்த் இல்லத்திற்கு சென்ற நடிகை ரம்பா அவரது மனைவி பிரேமலதாவின் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார். மேலும், வெளியே வந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்து

 

அவர் கேப்டன் விஜயகாந்த் மறைவு மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது. அவர் உயிரிழந்த சமயத்தில் நான் கன்னடாவில் இருந்ததால் நேரில் வர முடியவில்லை.? அவர் எவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு செல்வார் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை..

 

மேலும், கேப்டன் விஜயகாந்த் எனக்கு ஹீரோவாகத் தான் தெரியும்.? அவர் மிகவும் ஒரு நல்ல மனிதர்.. மேலும், படபிடிப்பில் கூட என்னை நன்றாக கவனித்துக் கொண்டுள்ளார். மேலும், எனக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று சொல்லி என்னுடைய பெற்றோரிடம்

 

அட்வைஸ் சொல்லிக் கொண்டே இருப்பார். இன்று அவர் உயிருடன் இல்லை அவர் இருக்கும் பொழுது ஒருமுறை கூட என்னால் வந்து அவரை பார்க்க முடியவில்லை.. இதை நினைத்து என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் வருத்தப்படுவேன் என்று நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.